ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது.! 300 கிலோ கஞ்சா மற்றும் ஈச்சர் லாரி பறிமுதல் செய்த போலீசார்.!
சென்னை

ஆந்திராவில் இருந்த கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை.! ஈச்சர் சரக்கு வாகனத்தோடு தட்டி தூக்கிய போலீசார், 300 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது.
சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு, ஆந்திராவில் இருந்து ஈச்சர் சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் அனகாபுத்தூர் புறவழிச்சாலை அருகே சரக்கு வாகத்தை கண்காணித்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த தேஜஸ் பாபு வாக்மேரே(28), சாகர் சகாதேவ் இரண்டே(31), என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது,
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் ஈச்சர் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S K