அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பிரச்சினை தொடர்பாக நோட்டீஸ் வழங்கிய த.வெ.க. வினர் கைது.!
திருவண்ணாமலை

திருவண்ணாமலை த வெ க - வினரை கைது செய்த காவல்துறையினர்.!
இன்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அறிக்கை வெளிப்படுத்தியதை தொடர்ந்து
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செயலாளர் உதயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கும்போது காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தினரை கைது செய்தனர் காவல்துறையினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து த வெ க தொண்டர்கள் கோசமிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தினர்.இதனால் சிறிது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.