இளம் வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எலத்தகிரி கொன்சாகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
உலகிற்கே முன்னோடியாக அனைவருக்கும் வாக்குரிமை கொண்டு வந்தது இந்தியா தான். எனவே இளம் வாக்காளர்கள் நடைபெற உள்ள சட்டமன்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்களித்து, தங்களைச் சுற்றியுள்ள வாக்காளர்களையும் வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை.
செய்தியாளர்
மாருதி மனோ
