உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிறைவு நாள் விழா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. !

கரூர்

உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிறைவு நாள் விழா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. !

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு குடியிருந்தனர். அப்போது திடீரென கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுவிட முடியாமலும், நெரிசலில் மிதிப்பட்டும் பலர் காயம் அடைந்து மயங்கி விழுந்தனர். இதில் 41 பேர் உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிசிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த நெரிசலில் மகேஸ்வரி என்பவரின் ஒன்றரை வயது குழந்தையும் உயிரிழந்தார். இந்நிலையில் குழந்தையின் தாய் மகேஸ்வரிக்கு "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிறைவு நாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

கரூர், சுக்காலியூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 78 பயனாளிகளுக்கு 5.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் தாய் மகேஸ்வரிக்கு "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிறைவு நாள் விழாவில், கரூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நலத்திட்ட உதவி வழங்கினார். மாற்றுத்திறனாளியான மகேஸ்வரி காதொலி கருவி கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருவி வழங்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் நிறைவு நாள் விழாவில் காதொலி கருவியை பெற்றுக் கொண்ட மகேஸ்வரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். அப்போது அவரை காலில் விழவேண்டாம் என்று செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி கூறுகையில், "உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த 15.7.2025 முதல் தொடங்கப்பட்டு 179 இடங்களில் இன்றுடன் நிறைவு இதில் ஊரகப்பகுதிகளில் 101 இடங்கள் நகரப்பகுதிகளில் 78 இடங்கள் என மொத்தம் 179 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு பெற்றது. 69,887 மனுக்கள் தரப்பட்டு முதல் கட்டமாக 48, 373 மனுக்கள் ஏற்கப்பட்டது மீதமுள்ள மனுக்களும் விரைவில் அது விசாரிக்கப்பட்டு ஏற்கப்படும்" என தெரிவித்தார்.