நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் தேசியக் கொடியேற்றினார். !

சென்னை

நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் தேசியக் கொடியேற்றினார். 

சென்னை சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்  தேசியக் கொடியேற்றி வைத்தார்.

மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். 

உடன் காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

          S S K