கோக்ரஜாருக்கான ரூ. 4,570 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.!
அஸாம்
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக அசாம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் குவாஹாட்டி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் அன்பாக வரவேற்றனர்.
கனமழை காரணமாக கோக்ரஜார் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குவாஹாட்டியிலிருந்து காணொலி வாயிலாக ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi MR
விளம்பரம் மற்றும் தொடர்புக்கு
G Pay 944 2 999 074
