ஹார்முஸ் நீரிணையைக் கடக்க இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!.!
ஈரான் + இந்தியா
ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து, "ஹார்மோஸ்" நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து தெற்காசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டுள்ளது. மேலும், எங்கள் அனுமதியின்றி இந்த பாதையைக் கடந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்திருந்தது.
இதனால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட கப்பல்களும் அங்கேயே தத்தளித்து வந்தன. இதனால், நம் நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் உட்பட சில தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இந்தியக் கப்பல்களுக்கு அனுமதியளிப்பதாக ஈரான் அறிவித்தது. இந்நிலையில், இந்தியக் கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு இந்தியக் கப்பல்கள் ஹார்மோஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதியளித்துள்ளது.
தொடர்ந்து, இந்த இரு இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்மோஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, சீனா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தொடர்ந்து இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
