மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த ஹஜ் கமிட்டி தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளருக்கு மேட்டுப்பாளையம் ம ம க சார்பாக வரவேற்பு. !
மேட்டுப்பாளையம்
ஊட்டியில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த ஹஜ் கமிட்டி தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் , மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ப.அப்துல் சமது MLA கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் M. அப்துல் ஹக்கீம் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் மமக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹக்கீம் தாயார் மறைந்த செய்தி அறிந்து , நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் .


இந்நிகழ்வில் காரமடை காளம்பாளையம் புஜங்கனூர் வக்பு வாரியத்திற்கு சொந்தமான ஆஷூர்கானா பள்ளிவாசல் & கபர்ஸ்தான் சம்பந்தமான பிரச்சனை குறித்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசிக்கப்பட்டது.
உடன் மமக தலைமை பிரதிநிதி அனல் அக்பர் ,மமக மாவட்ட செயலாளர் முஹம்மது அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
