சட்டக்கல்லூரி மாணவரை வழிமறித்து உருட்டுக் கடையால் தாக்கிய நபர்கள் குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார்.!

சென்னை

சட்டக்கல்லூரி மாணவரை வழிமறித்து உருட்டுக் கடையால் தாக்கிய நபர்கள் குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார்.!

வேளச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவரை வழிமறித்து உருட்டுக் கடையால் தாக்கிய நபர்கள் குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார். 

தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி நேருநகரை சேர்ந்தவர் கோகுல் ஆந்திராவில் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் நேற்று இரவு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் இடிப்பது போல் வந்த இருவரை, திரும்பி பார்த்த போது அவர்கள் ஆபாசமாக திட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்து இருசக்கர வாகனத்தை வழி மறித்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பெரிய உருட்டுக் கட்டையால் சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில் மண்டை உடைந்து, கையில் வீக்கம் ஏற்பட்டது அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கி சிகிச்சை பெற்று கிண்டி காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் புகார் அளித்தும் சி.எஸ்.ஆர் கூட வழங்காமலும், உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றார். 

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவர் கோரிக்கை வைக்கின்றார்.

செய்தியாளர்

       S S K