சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படும் நாகர்கோவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் அதிகாரிகளின் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என டி எஸ் ஆர்.சுபாஷ். !

நாகர்கோயில்

சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படும் நாகர்கோவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் அதிகாரிகளின் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என டி எஸ் ஆர்.சுபாஷ். !

சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படும் நாகர்கோவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் அதிகாரிகளின் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்  உரை.

சிறுபான்மை சமூகத்தவரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் மின்சாரத்தை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி துண்டித்து, அவர்களை வஞ்சித்து, தொழில் நிறுவனங்களை மூடும் நோக்குடன் செயல்படும் நாகர்கோவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும், மின்சாரத் துறை அதிகாரிகளையும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அது மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அரசின் பல்வேறு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிந்த நிலையில் பொருட்படுத்தாது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நாகர்கோவிலில் செயல்படும் புகழ்பெற்ற பேக்கரி நிறுவனத்தின் மின்சாரத்தை துண்டித்தது ஏன்? தொழில் செய்பவர்களை மிரட்டி தங்கள் தேவைகளை சாதிப்பதற்காகவா? இது சட்ட மீறல் ஆகாதா? இது தொழில் செய்பவர்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் ஆகாதா?

“திராவிட மாடல் ஆட்சியின்” பெயரில் அரசு அதிகாரிகள் மக்களை கொதி நிலையிலேயே வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!.

நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை. அந்த வகையில் நாகர்கோவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் அதிகாரிகளின் அத்து மீறலை கண்டிக்கிறோம்.

சிறு, குறு வணிகத்தை தமிழக அரசு ஊக்குவித்துக் கொண்டுள்ள நிலையில், இது போன்ற அதிகாரிகளின் வரம்பு மீறிய செயல் தமிழக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழக அரசும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இவ்விசயத்தில் உடனே தலையிட்டு அங்கு தொழில் செய்பவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோருகிறோம், என  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ( TUJ ) மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

மாருதி மனோ