1 கோடி ரூ மற்றும் தங்க நகைகளை பெற்று பெண்ணை ஏமாற்றிய அரசு மருத்துவர் கைது. !
புதுச்சேரி
புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணை மோசடி செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த டாக்டர் கடந்த சில நாட்களில் ஒரு பெண் உதவியாளரிடம் ரூ.1 கோடி பணம் மற்றும் ஆறு சவரன் தங்க நகை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே காலிமனையை பத்திர பதிவு செய்து தருவதாக கூறி, பெண்ணிடம் இருந்து பணத்தையும் ,நகையையும் பெற்றதாகவும் ஆனால் பின்னர் அந்த காலிமனையை வேறு ஒருவரிடம் விற்று விட்டு பணத்தையும், நகையையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெண் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பின்னர் விசாரணை நடத்திய காவல்துறையினர் பாதுகாப்பு படையினர் மூலம் டாக்டரை தேடி பிடித்து கைது செய்துள்ளனர்.
மேலும் மருத்துவரிடம் ரூ.17 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
