அதிமுக சார்பில் மீண்டும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கே.அசோக்குமார் .!
கிருஷ்ணகிரி
அதிமுக சார்பில் மீண்டும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கே.அசோக்குமார் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து இன்று காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM. சதீஷ்குமார் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காவேரிப்பட்டணம் நகரக் கழக செயலாளர் எம்.விமல், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பையூர்.ரவி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
