குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் 2-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா.!

கிருஷ்ணகிரி

குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் 2-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா.!

குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோக விழாவில் ஏராளமான கிராம மக்கள் அரிசி, வாழைத்தார் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசைகளுடன்  கலந்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே செட்டிமாரம்பட்டி கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் 2-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சுவாமி சண்முகநாதர் திருக்கல்யாணத்தினை முன்னிட்டு செட்டிமாரம்பட்டி, கிருஷ்ணன் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மணமகன், மற்றும் மணமகள் வீட்டில் இருந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், அரிசி, பருப்பு, வாழைத்தார், சேவல், கோழி பல்வேறு சீர்வரிசைப் பொருட்களுடன் மேளதாளங்களுடன் திருக்கோவில் கொலு மண்டபத்தில் நடைப்பெற்ற திருக்கல்யாண விழாவில் கலந்துக் கொண்டு சீர்வரிசைத் தட்டுகளை மணமக்களான கொடுத்தனர். பின்னர் கொலு மண்டபத்தில் திருக்கல்யாண அலங்காரத்தில் காட்சியளித்த ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சுவாமிக்கு கிராம மக்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டு பூநூல் கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திருமண சடங்குகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் காட்சியளித்த ஶ்ரீ வள்ளி மற்றும் தேவசேனா ஆகியோருக்கு சுவாமி சண்முகநாதர்  அக்னிசாட்சியுடன் மங்கள வாத்தியத்துடன் தாலி கட்டும் வைபோகம் நடைபெற்றது.

தொடர்ந்து மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த
ஶ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சண்முகநாதர் சுவாமியை கிராம மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். திருமண விழாவினைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபோக விழாவிற்கு வருகை தந்த சுவாமி சண்முகநாதரை வழிபட்ட அனைவருக்கும் திருமண விருந்தினை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான  எல். சுப்பிரமணியன் ஏற்பாட்டில் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செட்டிமாரம்பட்டி மற்றும் கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ