வேலைக்குனு தான் கையெழுத்து வாங்கினாங்க, கரூர் சம்பவத்தில் மனைவியை இழந்த செல்வராஜ் பேட்டி. !

கரூர்

வேலைக்குனு தான் கையெழுத்து வாங்கினாங்க, கரூர் சம்பவத்தில் மனைவியை இழந்த செல்வராஜ் பேட்டி. !

கரூர்: வேலை நிமித்தமாக கையெழுத்து போடச் சொன்னதால் போட்டேன். மற்றபடி இந்த கையெழுத்தை பெற்றதே உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு மனுத்தாக்கல் செய்யத்தான் என்பது எனக்கு தெரியாது என கரூர் கூட்ட நெரிசலில் மனைவியை இழந்த செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வேலை நிமித்தமாக கையெழுத்து போடச் சொன்னதால் போட்டேன். எனது பெயரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது எனக்கு தெரியாது.

எனது பெயரில் மனு தாக்கல் செய்து யாரோ மோசடி செய்துள்ளனர். எனவே எனது பெயரில் தொடரப்பட்ட மனுவை ரத்து செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கோரியுள்ளேன். இதற்காக நான் சட்ட உதவி மையத்தை நாடியுள்ளேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி சட்ட உதவி மையத்தை அணுக சொல்லவில்லை என செல்வராஜ் தெரிவித்துள்ளார்.