சிறுமுகை அன்னூர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
மேட்டுப்பாளையம்
சிறுமுகை அன்னூர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சிறுமுகை லிங்காபுரம் அடுத்துள்ள உழியூர் பகுதியை சேர்ந்த பாரதி (25), ராமசாமி (35), சக்திவேல் (21)
இவர்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் விவசாய கூலி வேலை முடித்துவிட்டு வெள்ளி குப்பம்பாளையத்திலிருந்து சிறுமுகை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த போது வாகனத்தை ஒட்டிய பாரதி அதிவேகமாக ஓட்டி வந்து எதிரே வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

மேலும் ஆம்புலன்ஸ் மூலம் விபத்திற்குள்ளான மூவரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் பாரதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
மேலும் ராமசாமி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் அறிந்த சிறுமுகை காவல் துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
