தமிழ்நாடு தலை குனியாது ஆலந்தூர் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம்.!
காஞ்சிபுரம்
தமிழ்நாடு தலை குனியாது ஆலந்தூர் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம்.!
தி.மு.க.வின் சாதனைகளை பட்டியலிட்டு
அ.தி.மு.க வை வறுத்தெடுத்த அமைச்சர்.தா.மோ.அன்பரசன்
கனிமொழி என்.வி.என் சோமு
எம்.பி.!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் "தமிழ்நாடு தலை குனியாது" திராவிட மாடல் நல்லாட்சியின் 5 ஆண்டு சாதனை விளக்க மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நங்கநல்லூர் 48வது தெரு கே வி பி வங்கி அருகில் பகுதி செயலாளரும் 12வது மண்டலக் குழுத் தலைவருமான சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும்
சிறு -குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் மற்றும் மாநில மருத்துவர் அணி தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் உரையாற்றிய தா.மோ. அன்பரசன் தொகுதிக்கு செய்திருக்கும் திட்டங்களையும் ஒரு சில தினங்களில் முதல்வரால் இப்பகுதியில் தொடங்கி வைக்க போகும் திட்டங்களையும் பட்டியலிட மக்கள் வியந்து போனார்கள்.தொடர்ந்து அ.தி.மு.க. வை வறுத்தெடுத்த அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் என்ன இப்பகுதிக்கு செய்தார்கள் என்றும் இன்றைக்கு கூட சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி சுமார் மூன்று மணி நேரம் நேரத்தை வீணடித்தாரே தவிர மக்களுக்குக்கான எதையும் பேசவில்லை அவரெல்லாம் ஒரு கட்சியின் தலைவர் என்று சொல்வதற்கு தகுதி இல்லாதவர்.என காட்டமாக கூறினார்.,இன்றைக்கு தே.மு.தி. க. நம்முடன் இணைந்து வரலாற்றின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. எனவே வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.டெபாசிட் இழந்து போவது உறுதி என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இறுதியாக உரையாற்றிய கனிமொழி சோமு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிருக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டவர்.ஒன்றிய பா.ஜ.க.அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ஒரவஞ்சனை பட்ஜெட்டையும்., அதில் தமிழ்நாடு எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தவர். இப்படிப்பட்ட நிலையிலும் நம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்றும் தமிழகத்தை இன்றைக்கு இந்தியாவே திரும்பி பார்க்கும் படி பொருளாதாரத்தில் நம்பர் ஒன் மாநிலமாகவும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களும், குறிப்பாக மகளிர்க்கான திட்டங்களை அண்டை மாநிலங்கள் பார்த்து பின்பற்ற கூடிய அளவுக்கு
செயல்படுத்தி இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வராகவும் நமது முதல்வர் உள்ளார். எனக்கூறி வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் நம் முதல்வரை அரியணையேற்ற ஒன்றிணைவோம்... வென்றுகாட்டுவோம்..என கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் தி.மு.க வின் அனைத்து அணியினரும் கலந்து கொண்டது மட்டுமின்றி
தி.மு.க. மகளிர் அணியினர் & பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டது பெண்கள் மத்தியில் தி.மு.க. வின் ஆட்சி மீது இருக்கும் நம்பிக்கையை காட்டியது.
செய்தியாளர்
சுகுமாரன்
