இனி ஒரு குடும்பம் இப்படிச் சிதையக்கூடாது!" - சாத்தான்குளம் தீர்ப்பைக் கேட்டு கதறியழுத ஜெயராஜ் குடும்பத்தினர் - நீதிபதிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். !

சாத்தான்குளம்

இனி ஒரு குடும்பம் இப்படிச் சிதையக்கூடாது!" - சாத்தான்குளம் தீர்ப்பைக் கேட்டு கதறியழுத ஜெயராஜ் குடும்பத்தினர் - நீதிபதிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். !

சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கில் 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், 6 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக ஜெயராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்கள், தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். "எங்கள் குடும்பம் இழந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், இன்று கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது. இனி ஒரு குடும்பம் கூட காவல்துறையினரால் இப்படிச் சிதைக்கப்படக் கூடாது" எனத் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், இந்த நீண்ட கால சட்டப் போராட்டத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

"உண்மையைக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனையாக மரண தண்டனை வழங்கிய நீதிபதி முத்துக்குமரன் அவர்களுக்குக் கோடி நன்றிகள். இந்த வழக்கை ஆரம்பம் முதலே உலகறியச் செய்து, நீதிக்காகக் குரல் கொடுத்த ஊடகங்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்."

சாத்தான்குளம் பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எங்களுடன் நின்றதால் தான் எங்களால் இவ்வளவு தூரம் போராட முடிந்தது. காவல் நிலைய மரணங்கள் இனி நிகழக்கூடாது என்பதற்கான ஒரு பாடமாக இந்தத் தீர்ப்பு அமையும்" என இக்குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இவர்களது நீதிக்கான பயணம், 2026 ஏப்ரல் 6-ம் தேதி ஒரு முற்றுப்புள்ளிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )