கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எல், சுப்பிரமணியன் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எல், சுப்பிரமணியன் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேண்டி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல் சுப்பிரமணியன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது விருப்ப மனுவினை தாக்கல் செய்து இருந்தார்,
ஆனாலும் கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொயில் போட்டியிட விருப்பம் கேட்டு பலர் போராடி வந்ததால் எல் சுப்பிரமணியன் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்பளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி நாள் என்பதால் கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயோட்சை வேட்பாளராக போட்டியிட தனது விரும்ப மனுவினை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் எல். சுப்பிரமணியன் தனது மனுவினை வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷாஜஹானிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.


அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து கிருஷ்ணன் முன்னாள் நகர தலைவர்கள் வின்செண்ட், தக்காளி தவமணி, முன்னாள் கவுன்சிலர் இராதாகிருஷ்னன் மாவட்ட விவசாயி அணியின் மாவட்டத் தலைவர் இராமசந்திரன், நெடுங்கல் சுப்பிரமணி, கோவிந்தன் நாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
