தூத்துக்குடியில் மாணவி கற்பழித்து கொலை, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியல்.!
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாக கிராம மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதை தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல்துறையினர் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக போக்குவரத்தை மாற்றி அனுப்பினர்.
இந்நிலையில் இன்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் வேப்பலோடை கல்மேடு பாலார் பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாணவியின் இறப்பிற்கு நீதி வேண்டும், தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
