எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா. !

ராமநாதபுரம்

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா. !

இன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், விடுதலைப் போராட்ட வீரர் ஐயா முத்துராமலிங்கத் தேவரின்118-ஆவது ஜெயந்தி விழா எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் நடத்தப்பட்டது.

கட்சி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு, தனது சிந்தனை மற்றும் செயல்பாடுகளை எப்போதும் சமூக நல்லிணக்கத்திற்காக  முன்னெடுத்துச் சென்ற தேவர் பெருமகனாரின் அரும்பணிகளை நினைவுகூர்ந்ததாகவும் நெல்லை முபாரக் கூறியிருந்தார்.

நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அஸ்கர் அலி, மற்றும் இராமநாதபும் கிழக்கு மாவட்டத் தலைவர் ரியாஸ் கான், பொதுச்செயலாளர் சுலைமான், மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் பாஞ்ச் பீர், அண்ணன் சோமு, அண்ணன் மூர்த்தி, முனிய செல்வம்,  வேல்முருகன் மற்றும் கட்சியின் மாவட்ட, தொகுதி  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.