அசைவ விருந்துடன் அமர்க்களப்படுத்திய நாவலூர் ராஜாராம் இல்லத் திருமண வரவேற்பு விழா.! அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்று வாழ்த்து.!
செங்கல்பட்டு
அசைவ விருந்துடன் அமர்க்களப்படுத்திய நாவலூர் ராஜாராம் இல்லத் திருமண வரவேற்பு விழா.! அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்று வாழ்த்து.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி ராஜாராம் ஊராட்சி
தி மு. க. செயலாளர் ராஜாராம் ஆகியோரின் இல்லத் திருமண வரவேற்பு விழா திருப்போரூர் அருகே அமைந்துள்ள *சய்தன்யா மஹாலில்* அறுசுவையாக அசைவ பிரியாணி மற்றும் மீன் வறுவல் என விருந்து வைத்து வெகு சிறப்புடன் நடைபெற்றது...

வரவேற்பு விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் சிறு- குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மணமக்கள் ஆர்.. நிகேஷ்.-எம். விஷாலி ஆகியோரை வாழ்த்தினார்.
அமைச்சருக்கு மணமக்கள் சார்பாக திருமண நினைவு பரிசினை ராஜாராம் மற்றும் மகாலட்சுமி ராஜாராம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

உடன் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான எஸ் ஆர் எல். இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் வேளாண் ஆத்ம குழு தலைவருமான பையனூர் எம்.சேகர், திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான
படப்பை மனோகரன், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் நீலாங்கரை வி.எட்டியப்பன் திருப்போரூர் பேரூர் கழக செயலாளரும்,திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவருமான மு.தேவராஜ், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ்,திருப்போரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன்,திருப்பாேருர் வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கேளம்பாக்கம்
கே.ஏ.டி. அன்பு மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன், ஊராட்சி மன்ற தலைவர்கள். முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன்,பொன்மார் நாராயணன்,புதுப்பாக்கம். ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாழம்பூர் கருணாகரன்,அ.தி.மு.க.கட்சியின் தாழம்பூர் ஊராட்சி காரணை.பாஸ்கர் & மகாலட்சுமி பாஸ்கர்,லயன் டி. தேவ சித்தம் தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைத்து விருந்தினர்களையும் நாவலூர் ஊராட்சி செயலர் ரமேஷ் வரவேற்று மகிழ்ந்தார்.
செய்தியாளர்
சுகுமாரன்
