முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.பி.எம். முனுசாமி கவுண்டரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பி.கே.பி.எம். சாலை பெயர் பலகையை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி.!

கிருஷ்ணகிரி

முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.பி.எம். முனுசாமி கவுண்டரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பி.கே.பி.எம். சாலை பெயர் பலகையை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி.!

கிருஷ்ணகிரி மக்களின் வசதிக்காக காலனி இணைப்பு சாலைக்கு நிலத்தை தானமாக வழங்கிய முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.பி.எம். முனுசாமி கவுண்டரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பி.கே.பி.எம். சாலை பெயர் பலகையை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிகாலத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த பி.கே.பி. எம்.முனுசாமி கவுண்டர் மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாகவும், காமராஜர் ஆட்சி காலத்தில் சட்டமன்ற காங்கிரஸ் செயலாளர் என்ற உயரிய பதவி வகித்தவர் மட்டுமன்றி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகள், கிராமங்களில் சாலை வசதி தர்மபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகக் காரணமாக இருந்த பி.கே.பி.எம். முனுசாமி அவர்கள் கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் உள்ள காலணி கிழக்கு இணைப்பு சாலைக்காக பல கோடி மதிப்பிலான நிலத்தினை தானமாக வழங்கி உள்ளார்.

இந்த நிலையில்  நகர மக்களின் வசதிக்காக நிலம் கொடுத்த காலனி இணைப்பு சாலைக்கு பி.கே.பி.எம். முனுசாமி கவுண்டர் அவர்களின் நினைவாக பெயர் வைக்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.

இத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட அந்த சாலைக்கு தமிழக அரசு அரசானையின்படி அந்த சாலைக்கு பி.கே.பி.எம்.
முனுசாமி சாலையாக பெயர் மாற்றம் செய்துள்ளது. 

இதனையடுத்து பி.கே.பி.எம்.முனுசாமி கவுண்டர்
அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த சாலையின் பெயர் பி.கே.பி.எம். சாலை என பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து அதன் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிதாத், சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் பி.கே.பி.எம். சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்து, அவரின் திரு உருவப் படத்திற்கு  மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் பல வருடங்களுக்கு பிறகு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பி.கே.பி. எம்.முனுசாமி கவுண்டரின் குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, தொழிலதிபர் போஜராஜ் வர்மா ஆகியோர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர். எம்.சி. இரகு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜேசு துரைராஜ், நாராயண மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, முன்னால் நகர தலைவர் வின்சென்ட், நகர தலைவர் லலித் ஆண்டனி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ