பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கப்பட்டது. !
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு 2025 - 2026 ஆண்டிற்கான மிதிவண்டிகள் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கி விழா காணொளி காட்சி வாயிலாக நடைப்பெற்றது.


இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 367 மாணவிகளுக்கு ரூ.17 இலட்சத்து 67 ஆயிரத்து 920 மதிப்பிட்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
உடன் பள்ளி ஆசிரியர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
