சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பர்கூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் .!

கிருஷ்ணகிரி

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பர்கூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் .!

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பர்கூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பர்கூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதியரசர்  M.பத்மநாபன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதில் கல்லூரி முதல்வர் M.முருகன் மற்றும் திட்ட அலுவலர்கள் சேவியர் சந்தோஷ் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் N.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீதிபதி பேசும்பொழுது..... 
அனைத்து மாணவ மாணவிகளும் சட்டம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் என்றும், போதைப் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல் குடும்ப பிரச்சினைகள் மற்றும் சட்டம் சார்ந்த எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சட்டப் பணிகள் ஆணைகளை அணுகினால் சுமுகமான முறையில் தீர்வு காணப்படும்  என்றார்.