SC - ST பெண்களிடம் அழகு இல்லை.. ஆனாலும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு. !

மத்திய பிரதேஷ்

SC - ST பெண்களிடம் அழகு இல்லை.. ஆனாலும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு. !

போபால்: ''எஸ்சி - எஸ்டி பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள். ஆனாலும் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

அழகிய பெண்கள் ஆண்களின் கவனத்தை திசைதிருப்புவது தான் பலாத்கார சம்பவங்களுக்கு முக்கிய காரணம்'' என்று மத்திய பிரதேச மாநிலகாங்கிரஸ் எம்எல்ஏ பூல் சிங் பரையா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் பூல் சிங் பரையா. இவர் பலாத்கார குற்றங்கள் குறித்து ஜாதியை மையப்படுத்தி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக பூல் சிங் பரையா பேசியதாவது:

''இந்தியாவில் பாலியல் வல்லுறவால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் யார்? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தான். ஒருவன் எந்த மனநிலையில் இருந்தாலும் சரி, அவன் ஒரு அழகான பெண்ணை பார்த்தால், அவனது மனம் திசை திரும்பும். அதோடு அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய தூண்டுவிடும். இதுதான் பலாத்காரத்துக்கான வரையறையாக உள்ளது.

எஸ்சி, எஸ்டி, பிற பிற்படுத்தப்பட்ட பெண்கள் அழகாக இல்லாவிட்டாலும் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் இது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. பழங்கால நூல்களில் கூறப்பட்ட கருத்துகளால் இந்த பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். நூல் ஒன்றில் குறிப்பிட்ட ஜாதி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது புனித யாத்திரை மேற்கொண்டதற்கு சமமான ஆன்மிக பலனை தரும் என கூறப்பட்டுள்ளது.

இப்போது அவனால் யாத்திரை செல்ல முடியாவிட்டால், என்ன மாற்று? வீட்டில் உடல் உறவு கொண்டால் பலன் கிடைக்கும். இருட்டிலோ, வெளிச்சத்திலோ அவளை பிடித்து வல்லுறவு செய்ய அவன் முயற்சிப்பான். அவளது சம்மதம் இல்லாமல் அவனால் இதை செய்ய முடியாது. அதனால்தான் நான்கு மாதக் குழந்தைகள் மற்றும் ஒரு வயதுக் குழந்தைகள் வல்லுறவு செய்யப்படுகின்றன. அவன் பலனுக்காக இதைச் செய்கிறான்.

மேலும் பாலியல் பலாத்காரம் என்பது தனிநபர்களால் அல்லாமல் குழுவால் இழைக்கப்படும் குற்றமாகும். இதுபோன்ற குற்றங்கள் பிறழ் மனநிலையில் இருப்பவர்களால் நிகழ்த்தப்படுகிறது'' என்று கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.