ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக தீர்த்தவாரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்.! எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக தீர்த்தவாரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்.! எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக தீர்த்தவாரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்.! எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !



புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதி ஒதியம்பட்டு அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மாசிமக தீர்த்தவாரி விழாவில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரிக்கு வருகை புரிந்த உற்சவ மூர்த்தி சுவாமிகளை வரவேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, மாசிமக தீர்வாரிக்கு வருகைபுரிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், சக்திவேல்,  தலைமை செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு என்கிற சண்முகசுந்தரம், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர்கள் காளி, தெய்வேந்திரன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, மற்றும் சபரிநாதன், ராஜி, மிலிட்டரி முருகன், சேகர், காசிநாதன், கார்த்திகேயன், மந்திரிக்குமார், மனோகர், மூர்த்தி, முத்து, அன்பு, அஞ்சாபுலி, பரதன், தயாளன், முருகன், பாலு, ரகு, சந்தோஷ், மகேஷ், சூர்யா, கோபி, ராமஜெயம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )