புதுச்சேரியில் 41 பயனாளிகளுக்கு வீடுகட்டும் தவணைத் தொகை ஆணையை வழங்கிய எதிர்கட்சி தலைவர்
வில்லியனூர் தொகுதியில் 41 பயனாளிகளுக்கு வீடுகட்டும் தவணைத் தொகை ஆணையை
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !
குடிசைமாற்று வாரியம் மூலம் புதுச்சேரி வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் 33 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வீடு கட்டும் முதல் மற்றும் மூன்றாம் தவணைத் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தியதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டும் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் ரவி, இடைநிலைப் பொறியாளர் அணில் குமார் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ் அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், கோபி. தொமுச பேரவை தலைவர் அங்காளன், ஆதிதிராவிட அணி துணைத் தலைவர் கதிரவன், துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, சுப்பிரமணியன், ராஜி, சபரி, சக்திவேல், மிலிட்டரி முருகன், ராஜா முகமது, சுரேஷ், முருகன், சேகர், பாலகுரு, வீரக்கண்ணு, கார்த்திகேயன், பாலமுருகன், மனோகர், முத்து, தட்சணாமூர்த்தி, ராமஜெயம், ராஜேந்திரன், ஜீவா, கோவிந்தராஜ், மனோ, அபிமன்னன், நடராஜன், வேல்முருகன், ரமேஷ், சிலம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.