ஒரே கையெழுத்தால் ரூ 60 ஆயிரம் கோடி இழப்பு .!
அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தகப் போர், இந்தியாவின் ஏற்றுமதித் துறையில் ஆண்டுக்கு சுமார் $7 பில்லியன் (இந்திய மதிப்பில் ₹60,000 கோடி) இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு, பல முக்கியத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரசாயனங்கள், உலோகப் பொருட்கள், நகைகள், வாகனங்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற துறைகள் வர்த்தகப் போரினால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக இரசாயனங்கள் மற்றும் உலோகப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாகச் சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. வாகன ஏற்றுமதி சுமார் 15% வரையும், மருந்து ஏற்றுமதி 30% வரையும் குறையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகச் சமநிலையில் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கும்.
இந்தியா மீது கூடுதல் வரி
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இந்திய ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த மறுக்கிறது. இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. அதை அதிக லாபத்திற்கு வெளிச்சந்தையில் விற்கிறது. இதனால் வரி கணிசமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
டிரம்ப் வரி விதிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தகப் போர், இந்தியாவின் ஏற்றுமதித் துறையில் ஆண்டுக்கு சுமார் $7 பில்லியன் (இந்திய மதிப்பில் ₹60,000 கோடி) இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் பரஸ்பர வரிகள் விதிக்கும் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக ஆபத்தைச் சந்திக்கும் என மார்கன் ஸ்டான்லி மற்றும் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் போன்ற பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இவ்விரு நாடுகளும் அமெரிக்கப் பொருட்கள் மீது 10-25% வரை வரிகளை விதிக்கின்றன.
தற்போது, அமெரிக்கா இந்த நாடுகள் மீது 10%க்கும் குறைவான வரிகளையே விதித்து வருகிறது. ஆனால், பரஸ்பர வரிகள் விதிக்கும் கொள்கையால், அமெரிக்காவும் இதே அளவிலான வரிகளை விதிக்க வாய்ப்புள்ளது. இந்திய இறக்குமதி வரி, அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
"நாங்கள் மற்ற நாடுகளைச் சமமாக நடத்த விரும்புகிறோம்," என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைக்கத் தவறினால், அமெரிக்கா வரியை உயர்த்துவதன் மூலம் இந்தியப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். எனினும், டிரம்ப் வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் பட்டியலில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.