கல்லூரி வளாகத்திற்குள்ளேயே கண்களில் கறுப்பு துணியைக் கட்டியவாறு பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ஆம் தேதிகள்) ஆகிய மூன்று நாட்கள் தங்களது வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று பணிகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே கண்களில் கறுப்பு துணியைக் கட்டியவாறு பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு முனைவர் ம. பழனி தலைமைத் தாங்கினார்.

முனைவர் த. அன்பழகன், முனைவர் அருணா, முனைவர் புவனேஸ்வரி, முனைவர் பாமினி, முனைவர் உமாமகேஸ்வரி, முனைவர் வரலட்சுமி, முனைவர் சண்முகசுந்தரம், முனைவர் சிவக்குமார், முனைவர் சுவாமிநாதன், முனைவர் சித்திக், முனைவர் சுரேஷ், முனைவர் கண்ணதாசன், முனைவர் சுந்தரமூர்த்தி, முனைவர் ஷகிலா, முனைவர் மனோன்மணி, முனைவர் பமீலா ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்
தமிழ்நாடு அரசு கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து உரிய நியாயம் வழங்கும் வரை ஒவ்வொரு நாளும் இந்த போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடர் போராட்டமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
