அகசிப்பள்ளி ஊராட்சிக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், அகசிப்பள்ளி ஊராட்சிக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், சிவப்பிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ