மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஹரிஸ் பாபு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.!

கிருஷ்ணகிரி

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஹரிஸ் பாபு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.!

கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ்பாபு பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஹரிஸ் பாபு கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் 
மேற்கு மாவட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டினத்தில் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் அவர்களை நேரில்  சந்தித்த மேற்கு மாவட்டத் தலைவர் ஹரிஸ்பாபு பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்தினை தெரிவித்ததோடு ஆசியும் பெற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்  முத்துக்குமார் அவர்களையும் வட்டார காங்கிரஸ் தலைவர் விவேகானந்தன் ஆகியோரையும் சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திர வர்மா, முன்னாள் மாவட்ட தலைவர்  நாராயணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.சி.இரகு அவர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து ஆசிபெற்றார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி, கெலமங்கலம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முனிராஜ், சூளகிரி வட்டாரத் தலைவர் முனியப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ