கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவினை தேமுதிக முருகன். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவினை தேமுதிக முருகன். !

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவினை கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் முருகன் பிரேமாலதா விஜயகாந்த் அவர்களிடம் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை கட்சி தலைமையிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான தேமுதிக கட்சியினர் தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் முருகன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜுயின் தலைமையில் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணியார் பிரேமாலதா விஜயகாந்த் அவர்களிடம் கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட தனது விருப்பமனுவினை வழங்கினார். அப்போது தே.மு.தி.க மாநில கழக பொருளாளர் எல்.கே சுதீஷ், மாநில கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, கிருஷ்ணகிரி மாவட்ட கழக பொருளாளர் லட்சுமணன்,  வஜ்ரவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ