தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் குறித்து வீடியோ பிரச்சாரம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பாக நகராட்சி வாகனங்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026, வாக்காளர் படிவம் நிரப்புவது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
