கரூர் கூட்டத்தில் ட்ரோன்கள் மூலம் ஜனநாயகன் ஷுட்டிங் எடுக்கப்பட்டதாக விசாரித்து வரும் காவல்துறை. !
கரூர்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இதில் ஏ1 குற்றவாளியாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், ஏ2 குற்றவாளியாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஏ 3 குற்றவாளியாக இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூவரில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டுவிட்டார். புஸ்ஸி ஆனந்தும் நிர்மலா குமாரும் எங்கிருக்கிறார்கள் என தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். புஸ்ஸி ஆனந்தைத்தான் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறதாம். புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் ஏற்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்து போலீஸார் அங்கு தேடினர். இதையடுத்து அவர் புதுவையில் ஒரு அரசு பங்களாவில் தங்கியிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் பீகாரில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் கப்பலில் நடுக்கடலில் சுற்றி வருகிறார் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விண்ணப்பித்துள்ளார். இதன் மீது விசாரணை எப்போது நடக்கும் என தெரியவில்லை. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு நெருக்கமான கடப்பா தொழிலதிபரிடம் தஞ்சம் அடைந்து அவரின் பாதுகாப்பில் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயம் போலீஸுக்கு தெரியும். ஆனாலும் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதால் அந்த மனு மீது அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அடுத்த நிமிடமே அவரை கைது செய்துவிடுவது என்ற யோசனையில் பெங்களூரில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனராம்.
அவ்வாறு புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டால் அவரை காவலில் எடுத்து பல்வேறு விஷயங்களை விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு பட்டியலிட்டு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் நடித்து வரும் "ஜனநாயகன்" படத்தில் புஸ்ஸி ஆனந்தும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் கரூர் வந்த கூட்டத்திற்கும் ஜனநாயகன் படத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகன் படப்பிடிப்பு கரூர் கூட்டத்தில் நடத்தப்பட்டது என சொல்லப்படும் நிலையில் அங்கு சுற்றி சுற்றி வந்த டிரோன் கேமராவில்தான் ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது. எனவே விஜய் ஏன் தாமதமாக கரூருக்கு வந்தார், டிசம்பரில் பிளான் செய்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் வந்தது ஏன் உள்ளிட்டவை குறித்து அவரிடம் விசாரிக்க போகிறார்களாம்