கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருக்குறள் வார விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருக்குறள் வார விழா.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருக்குறள் வாரவிழா முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 93 நபர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., வழங்கினார்.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி அபிநயா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் திருமதி.கனிமொழி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ