தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் கலந்துகொண்டு கண்டன உரை.!

கரூர்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் கலந்துகொண்டு கண்டன உரை.!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரி செயல்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டார்கள்.

இது தொடர்பாக காவல்துறை செய்தியாளர் மற்றும் குவாரி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று 03.02.2026 செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கு.பழனி தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் ஆர் கஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் மாதேஸ்வரன், தமிழ்நாடு பத்திரிகைகள் சங்க நிர்வாகிகள் சரவணன், சந்திரமோகன், அரிப்புத்திரன், நந்தகுமார், அருண், பசவராஜ், முத்துலிங்கம், சத்யா, மேகராஜன், குரு ராகவேந்திரன், ஜெகன், ரமேஷ், திம்மராஜ், பர்கூர் ராஜா, மகி (எ) மகேந்திரன், ஞானசேகரன் மற்றும் பல்வேறு ஊடகவியலாளர்கள் என '40 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினார்கள்..

இதில் பத்திரிகையாளர்களை தாக்கிய கயவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து தனி சட்டம் இயற்ற வேண்டும்.பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் 

மாருதி மனோ