கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க போகும் விஜய்.! முன்னேற்பாடுகள் செய்ய புஸ்ஸி ஆனந்த் கரூர் பயணம். !

கரூர்

கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க போகும் விஜய்.! முன்னேற்பாடுகள் செய்ய புஸ்ஸி ஆனந்த் கரூர் பயணம். !

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்ல உள்ள நிலையில் வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகின்ற 17ஆம் தேதி விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலுச்சாமி புறத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மேலும் அதில் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதலை தெரிவிக்கும் விஜய் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையையும் வழங்குகிறார். விஜய் வருவதற்கு காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்க கோரி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தினர் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்ல உள்ள நிலையில் வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 41 குடும்பங்களையும் தனித்தனியாக சந்திக்காமல் திருமணம் மண்டபம் போன்ற இடத்தில் சந்திக்கவும் தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.