அருப்புக்கோட்டை தீயணைப்பு படை சார்பாக தீபாவளி பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம். !
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை கலாம் நகரில் செயல்படும் கிரீன் விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அருப்புக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பாக சிறப்பு நிலைய அலுவலர் ஷேக் உதுமான் தலைமையில் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க் கொள்ளப்பட்டது.
நிகழ்வில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் ராஜா முகம்மது சேட் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அன்சாரி