சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில செயலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். !

கிருஷ்ணகிரி

சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில செயலாளர்      காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். !

சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரோஷன்ரஷீத் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்தை சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் வர்த்தக காங்கிரஸ் தலைவராவும், என் ஆர்.ஐ. குளோபல் பவுண்டேஷன் டிரஸ்ட் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு சமுகப் பணிகளை மேற்கொண்டு வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த என்.ஆர். ஐ. பில்டர்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழில் அதிபருமான ரோஷன் ரஷீத் அவர்களின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயலாளராக சமுக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நியமனம் செய்து உள்ளார்.

இதனையடுத்து சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரோஷன் ரஷீத் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினை பெற்றுக் கொண்டார்.

இதனை அடுத்து சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரோஷன் ரஷீத் தனக்கு மாநில செயலாளராக நியமித்த மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் நாஞ்சில் ஜேசுதுரை, நாராயண மூர்த்தி, கிருஷ்ணகிரி கிராம கமிட்டி பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் ரகமதுல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி, சிறுபான்மை பிரிவு வாஜீத் பாஷா, மாரியப்பன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த கோவிந்தசாமி, ஜெய்சன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர

மாருதி மனோ