ரூ.5 கோடி பணம், 1.5 கிலோ தங்கம், 40 லி வெளிநாட்டு மதுபானம்.. இவ்வளோ லஞ்சமா.மிரண்டு போன. CBI.!

பஞ்சாப்

ரூ.5 கோடி பணம், 1.5 கிலோ தங்கம், 40 லி வெளிநாட்டு மதுபானம்.. இவ்வளோ லஞ்சமா.மிரண்டு போன. CBI.!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சப் புகாரில் கையும் களவுமாக சிக்கி கைதாகியுள்ளார்.

அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகளே மிரண்டு போகும் அளவுக்கு அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப் பணம், நகை, சொகுசு கார்கள், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பகுதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரன் சிங். இவர் 2007ம் ஆண்டு முதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இவர் ரோபார் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் இவர் பாட்டியாலா டிஐஜியாக பணியாற்றினார்.

ஹர்சரன் சிங் கைது: இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் மீது ஃபதேஹர் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய இரும்பு வர்த்தகர் ஒருவர் லஞ்சப் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தன் மீதான வழக்கு ஒன்றை முடித்து வைக்க ஹர்சரன் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்தை தரவில்லை என்றால் போலி வழக்கு போட்டு கைது செய்துவிடுவேன் என்றும் தொழிலதிபரை டிஐஜி ஹர்சரன் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து போலீஸ் அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட சிபிஐ, அந்த தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பணம் லஞ்சமாக கொடுக்க சொல்லி வழிகாட்டியுள்ளது. ஹர்சரன் சிங் அந்த லஞ்சப் பணத்தை பெறும் நேரத்தில் மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி: அதைத் தொடர்ந்து ஹர்சரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 1.5 கிலோ தங்கம், ரூ.5 கோடி ரொக்கப் பணம், BMW, Audi உள்ளிட்ட சொகுசு கார்களின் சாவிகள், 22 உயர் ரக கடிகாரங்கள், 40 லிட்டர் உயர்ரக வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், ஏராளமான சொத்துகளின் ஆவணங்கள், இரட்டை குழல் துப்பாக்கி
பிஸ்டல், ரிவால்வர் உள்ளிட்ட சொத்துக் குவியல்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.