மாம்பழம் சின்னம் யாருக்கு? சென்னை உயர்நீதி மன்றம். !

பா.ம.க.

மாம்பழம் சின்னம் யாருக்கு?  சென்னை உயர்நீதி மன்றம். !

பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சின்னம் தொடர்பான மோதல் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

கட்சியின் தலைமை அலுவலக முகவரி மாற்றம் மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கு ஒதுக்கிய இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) முடிவை எதிர்த்து, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக அடுத்த 3 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவு அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கு ஒரு தற்காலிக பின்னடைவாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான மாம்பழத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்த தெளிவான முடிவை தேர்தல் ஆணையம் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் அடையாளங்கள் தொடர்பான இந்த சட்டப் போராட்டம், பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.