கிணறில் குதித்த மனைவி காப்பாற்ற சென்ற கணவரும் பலி, குழந்தைகளின் நிலை பரிதாபம். !

விழுப்புரம்

கிணறில் குதித்த மனைவி காப்பாற்ற சென்ற கணவரும் பலி,  குழந்தைகளின் நிலை பரிதாபம். !

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சக்தி பரதன். இவர் இளைஞர் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார்.

இவருடைய மனைவி ராஜகுமாரி. இருவரும் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் ஆழ்ந்த ராஜகுமாரி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வீட்டின் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றை நோக்கி ஓடினார். அவரைத் தடுக்க சக்திபரதன் பின்னால் ஓடி சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

ஆனால் அதற்குள் ராஜகுமாரி கிணற்றில் குதித்து விட்டு உயிருக்கு போராடிய படியே தத்தளித்தார். மனைவியை காப்பாற்றுவதற்காக சக்திபரதனும் துணிச்சலாக கிணற்றில் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சில நிமிடங்களில் ராஜகுமாரியும் உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.இருகுழந்தைகளும் தாய், தந்தையின்றி நின்றி காண்பவர்கள் கண்களில் நீரில் வரவழைத்தது.