த வெ க ஒன்றிய செயலாளர் நிர்மல் குமார் கைது, த வெ க வினர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.!
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல்குமார்.. இவருக்கு 35 வயதாகிறது..இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், உடனே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மீதும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து சாணார்பட்டி போலீஸார் நிர்மல்குமாரை நேற்று கைது செய்தனர்.
திண்டுக்கல் சாணார்பட்டி
முதல்வரையும், நீதிபதியை 'அவதூறாக பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவர் விசாரணைக்காக சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு திண்டுக்கல் வெகவினர் கடுமையான அதிர்ச்சியடைந்தனர். அப்போது மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் மீது புகார் அளித்த திமுக நிர்வாகிகள் நிர்மல் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறு பரப்பியதாக கூறி அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையம் முன்பு போலீசார் உடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குண்டுக்கட்டாக தூக்கினர்
அதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சங்கர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது திடீரென போலீசாருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.. இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை போலீசார் அடித்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அனுப்பிய பின்னர் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவரை வாகனத்தில் ஏற்றி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.. போலீசாருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் நடந்த இந்த வாக்குவாதம் வீடியோவாகவும் யாரோ எடுத்து இணையத்தில் தற்போது பதிவிட்டுள்ளனர்.. அது வைரலாகி கொண்டிருக்கிறது.
தேச தியாகிகள்
இந்த வீடியோவில் தவெகவினர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. தவெகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் திமுக அரசு இப்படி கைது நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கி கொண்டிருப்பதாக கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
உடனே திமுக தொண்டர்கள் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. சட்டம் தன் கடமையை செய்யட்டும் ஒன்றும் தவறில்லை இவர்கள் ஒன்றும் பெரிய தேச தியாகிகள் அல்ல வருத்தப்படுவதற்கு என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.