கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். !

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார். இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பனை நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பனை நாற்றுகள் பெற்று, நடவு மேற்கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின்போது விவசாய பெருமக்கள் அனைவருக்கும் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், இணை இயக்குனர் (வேளாண்மை) காளிமுத்து, இணை இயக்குனர் (தோட்டக்கிதுறை) திருமதி இந்திரா, கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் நடராசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ