முட்டுக்காடு ஊராட்சியில் முத்தாய்ப்பான சமத்துவ பொங்கல்.!
செங்கல்பட்டு
முட்டுக்காடு ஊராட்சியில் முத்தாய்ப்பான சமத்துவ பொங்கல்.!
ஊராட்சி மன்றத் தலைவர் பி. சங்கீதா மயில்வாகணன் - மாவட்டப் பிரதிநிதி
மு.மயில்வாகணன் பங்கேற்பு.!
சமத்துவ பொங்கல் விழா என்பது பொங்கல் பண்டிகையை சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு சிறப்பு வடிவமாக தற்போது பரவலாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான தைப் பொங்கலை, சமூக சமத்துவத்தின் அடையாளமாக மாற்றி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தளங்களில் இந்த விழா மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முதன்மையாக விவசாயிகளின் நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும், சூரியனுக்கும், மழைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாகவும் இருந்தாலும், சமத்துவ பொங்கல் என்ற கருத்து திமுக ஆட்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சியில் ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா மிக உற்சாகத்துடன் ஆடல், பாடல், கொண்டாட்டம் என களை கட்டியது.
நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் பி சங்கீதா மயில்வாகணன் விழாவில் பங்கேற்ற மகளிர்களை உற்சாகப்படுத்தி இது பெண்களுக்கான ஆட்சி என்பதை நினைவுபடுத்தி எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாகவும் "சமத்துவ பொங்கல்"சிறப்பை எடுத்துக் கூறினார்.
நிறைவாக அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கியும் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்புடன் செய்திருந்தார் மாவட்ட பிரதிநிதி மு.மயில் வாகணன் என்பது குறிப்பிடதக்கத்தாகும்.
செய்தியாளர்
கோ சுகுமாரன்
செங்கல்பட்டு மாவட்டம்
