அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் தை பொங்கல் திருநாள் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் தை பொங்கல் திருநாளினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
தை பொங்கல் திருநாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


இதன்ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி சென்னை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தை பொங்கல் திருநாளினை யொட்டி ஶ்ரீ பெரிய மாரியம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஸ்ப பல்லாக்கில் எழுத்தருளிய ஸ்ரீ பெரிய மாரியம்மன் திரு வீதி உலா நடைபெற்றது. நகரின் பல்வேறு இடங்களில் மேள தாளங்களுடன் வீதி உலா வந்த அம்மனை ஏராளமானவர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் தை பொங்கல் திருநாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
