பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழக முதல்வர் பிறந்த நாளில் திமுகவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.!

கிருஷ்ணகிரி

பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழக முதல்வர் பிறந்த நாளில் திமுகவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.!

பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழக முதல்வர் பிறந்த நாளில் திமுகவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த தினம் உற்சாகமாக கொண்டப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அவர்களின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன் அவர்களின் ஆணைக்கு ஏற்ப திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு ஒன்றிய கழக செயலாளர் அறிஞர் முன்னாள் கவுன்சிலர் சேரலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவின் போது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வரின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தினை வலுப்படுத்த அனைவரும்  முன்வர வேண்டும் என வலியுறுத்தப்படது. மேலும் இந்த விழாவினைத்தொடர்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வரின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் நடைப்பெற்ற இந்த விழாவில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, கிளைக் கழக செயலாளர்கள் பத்மநாபன், ரமேஷ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கண்ணையன் ,மதியழகன் மற்றும் அறிவழகன், கார்த்திக் அண்ணாமலை மற்றும் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிளைக் கழக செயலாளர் BLA 2 மற்றும் BDA கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ