காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க காங்கிரஸ் கட்சி துரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்."

கிருஷ்ணகிரி

காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க காங்கிரஸ் கட்சி துரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்."

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க காங்கிரஸ் கட்சி துரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்கின்ற துரைசாமி தலைமையில், கிருஷ்ணகிரி சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் செல்லகுமாருக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி நகரில் உள்ள பழைய பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பொதுமக்கள் வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவரிடமும் திமுக அரசின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி வாக்குகளை சேகரித்தார். 

அப்போது மத்திய அரசின் அவலங்களையும், தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு ஆற்றிய நலன்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அறியனையில் ஏற்றிட, அனைவரும் தவறாமல் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியை சேர்ந்த திமுக மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் ராஜசேகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜான் டேவிட், மாவட்ட துணை தலைவர் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் முஸ்தாக் அகமது, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் திருமலை, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெயராஜ், வினோத், சேகர், பிரதீப், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ