கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை கடித எண் 13704255 / PA1/2026-3 நாள் 9.4.26 ன் படி (Equality Day)சமத்துவ நாள் உறுதிமொழி அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான 14.4.2026 முன்னிட்டு 14.04.2026 அன்று அரசு விடுமுறை என்பதால் 13.04.2026 ம் நாளன்று காலை 11.00 மணிக்கு அனைத்து அரசு அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்க சுற்றறிக்கைகள் துறை தலைமையில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 13.4.2026 காலை 11.00 மணியளவில் கல்லூரி முதல்வர் மரு.க. சத்தியபாமா, அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவருடைய பிறந்த நாளில் ஜாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு சந்திரசேகரன் மற்றும் துணை முதல்வர் மரு சாத்விகா மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேபோல் நகர் பகுதியில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. மது அவர்கள் தலைமையில் மரு. கிருபாவதி, மருத்துவ போதகர் மரு. சிவராஜ், முரளிதரன் ஆகியோருடன் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர்கள் எஸ் கே சரவணன், சக்திவேல், இளநிலை நிர்வாக அலுவலர் திருமதி சுமதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் முத்துராமன், சின்னண்ணன், திருமதி தாஜுன்நிஷா, சிவன், செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி மகாலட்சுமி, திருமதி அனிதா, திருமதி சரளாமாதவி உள்ளிட்டோருடன் அமைச்சுப் பணியாளர்கள் மருத்துவ அலுவலர்கள் இதர தொழில்நுட்ப பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் கிறிஸ்டல் பணியாளர் உட்பட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது
