காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள பழனிச்சாமி அன்னை இந்திரா காந்தி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கினார்.!

கிருஷ்ணகிரி

காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள பழனிச்சாமி அன்னை இந்திரா காந்தி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கினார்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை(தனி) சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள பழனிச்சாமி அன்னை இந்திரா காந்தி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பிரச்சாரத்தை துவங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை(தனி) தொகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக  பழனிச்சாமி போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் குப்புசாமி  தனது தேர்தல் பரப்புரையை ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் இருந்து துவக்கினார்.

இதன் முன்னதாக மத்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய இந்த பிரச்சராத்தின் போது அன்னை இந்திரா காந்தியின் திருஉருவச்சிலைக்கு காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது பிரசாரத்தினை துவக்கினார்.

பின்னர் மதிதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று பொது மக்களிடம் தமிழக அரசின் 5 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும் தமிழக அரசின் தேர்தல் அறிகையை எடுத்து கூறி கை சின்னத்திற்கு வாக்கினை சேகரித்தார்.

அப்போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம். சி, ரகு உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியான
திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக  சென்று வாக்கு சேகரித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ